காற்றால் செய்த புல்லாங்குழலோ நாம்

காற்றால் செய்த புல்லாங்குழலோ நாம்
துளைகள் இன்றி இசைக்க தெரிந்தோர் யார்.

இயல்பயும் தாண்டிய செயல்களை யாவரும் செய்ய, நேரத்தை முதலீட்டு, வலிகளை அணைக்கின்றோமோ நாம்

தருணத்திற்கேற்ப மாறுபவனை பச்சோந்தி என்று நினைத்து
மனநிலைக்கேற்ப மாறும் மனிதனே நாமும்

குற்றம் நடைபெறாமல் இருக்கத் தடுக்கின்றோம் என எண்ணி,
குற்றம் நமக்கு ஏற்படாமல் இருக்க வழிகண்டு
குற்றம் செய்ய அவன் நினைக்காமல் இருக்க வழி வகுத்தோமோ?
குற்றத்திற்கே அர்த்தம் உரைத்தோமோ? நாம் செய்த தீதுகளை கேக்க ஆளில்லை எனில் நாமும் நல்ல சமுதாயத்தை ஊற்றெடுத்துள்ளோம் என நினைத்தோமோ?

காவல் நிலையத்தில் மனநிலையை எண்ணி
உணர்வுகளை நசிக்கிக்கொண்டிருக்கின்ற மனித பூச்சிகள் ஏராளம்.

காவல் நிலையத்தில் அடைக்கப் படுபவனிற்கு அர்த்தம் உரைக்கும் காலம் அதுவே அவனுக்கு பொற்காலம்.

தவறு தவறு தான்.
தவிப்பு தவிப்பு தான்
மனிதம் மனிதம் தான்
மன்னிப்பும் மனிதம் தான்

முத்துக்குமார் வரிகளில், கண்ணீர் கண்டும் பூமி பூ பூக்கும்.

உணர்ச்சி இன்றி மனிதனும் இறப்பான்
உணர்ச்சி கொண்டு மனிதனும் எழுவான்.
உணர்ச்சிகள் எழுமோ?

அடுக்கு மாடி குடியிருப்புடன்,
ரெட்டை மாடி காவல் நிலையங்கள்,
மனித ரத்தத்தின் மெல் கட்டப்படும் பாலைவனமும்
மிகத்தொலைவில் இல்லை,

அது பித்தத்தை ஏற்றுக்கொள்ளும் மனித உணர்வுகளின் தொலைவில் இருக்கும், ரெட்டை முனைக்கத்தி.

Scroll to Top