மழையின் சத்தம்
மழையின் சத்தம் அதிகரிக்க, போர்வையை முகத்திலுர்ந்து நீக்கினாள்.
“ஏய்ய் என்ன?”
“மறந்துட்டேன். கொடி-ல துணி.” என்றாள்.
“பாத்தேன்… ச்சி விடு. இப்போ இங்க யாருக்கு துணி வேணும்?” என்று சொல்லி அவள் கழுத்தை இன்னொரு முறை முத்தமிட்டு வேட்டையாடினான்.
“நாளைக்கு office- கும் இப்படியே போறேன்-னு சொல்லு…நானும் விட்டுட்றேன்”
“இப்படியே மழை பேஞ்சா office போக எப்படி தோணும்? முழு நேரமும் இங்கயே இருப்பேனே”
பதில் சொல்ல வந்தவளை சொல்ல விடாமல் முத்தமிட்டான்.
நகரத்தைப் போர்வைப் போல் சூழ்ந்த அந்த மேகங்களால் வெளியே வெப்பம் குறைந்ததோ இல்லையோ, வீட்டின் உள்ளே சுகமாய் அமைந்தது பல போர்வை நொடிகள்.