மொழி- உரையாடல்

“மொழியால எதுவேனாலும் செய்யவும், சொல்லவும் முடியுமா?”

“முடியும்”

” எனக்கு அப்படி தோணல. சில விஷயங்கள மொழியால சொல்ல முடியாது நினைக்கிறேன்”

” அது நீங்க எத மொழினு சொல்றீங்கனு பொறுத்து”

” காதல சொல்ல முடியுமா?”

“Again, காதலே ஒரு மொழி தான். நீங்க எத மொழினு சொல்றீங்க?”

” பேசுற பாஷய சொல்றேன். இப்போ தமிழ் மொழியோ, ஆங்கிலமோ இல்ல வேற ஏதோ மொழியோ இருக்கட்டும். காதல உணர்த்திக் காட்ட முடியுமா? முடியாதுல?”

” காதல சொல்ல முடியும். எந்த உணர்ச்சியையும் சொல்ல முடியும்.”

” அப்போ காட்ட முடியதுனு ஒத்துக்கிறீங்கல?”

” அது யார் கிட்ட சொல்றீங்க, எப்டி சொல்றீங்க பொறுத்து இருக்கு”

“எப்டி?”

“இப்போ suppose நான் உங்கள காதலிக்கிறேன்னு சொல்றேன் வைங்க… உதாரணத்துக்கு…. உங்களுக்கு காதல் என்ற சொல்லோட ஆழம் எவளோ தெரிதோ, அவளோ உங்களால என் காதல உணர முடியும். எவளோ என்ன பத்தி தெரிதோ, அவளோ உங்களால அந்த உணர்ச்சிய நம்ப முடியும். இந்த மாதிரி நெறய விஷயங்கள உணர வெக்கலாம். எப்டி சொல்றோம் பொறுத்து தான்”

“So, மொழியால என்ன வேணாலும் செய்ய முடியும்னு நம்புறீங்களா? என்னால ஏத்துக்க முடியல”

“உங்களால ஏத்துக்க முடிலனு சொல்றதே மொழியால தான் சொல்றீங்க. ஆக, எல்லாமே முடியுமோ முடியாதோ, மொழியால ஏதாச்சும் செய்ய முடியும்னு வெச்சிப்போமே?”

“சரி அப்போ நான் தான் ஜெய்ச்சிற்கேன். ”

“மொழியும் காதலும், மொழி மேல எனக்கு இருக்குற காதலும் ஜெய்ச்சிருச்சுனு எனக்கு தோணுது.”

Scroll to Top