என் காதலி
“என் கதைய சொல்லிட்டேன். உங்களோட காதல் கதைய சொல்லுங்க. இருக்கும்னு நெனைக்கிறேன்.”
“ஓ, இருக்கே. சொல்றேன். என் காதலி. சின்ன வயசுல இருந்தே என் கூட தான் இருக்கா. அப்போலாம் ரொம்ப நெருங்கின நண்பர்கள்”
“சின்ன வயசு தோழியா?!! அற்புதம்”
“ஆமா. அப்போலாம் அவளுக்கு என்ன ரொம்ப பிடிக்கும். எப்பயுமே என் கூட தான் இருப்பா. ஆனா எனக்கு அவ்ளோவா பிடிக்கல. பள்ளி பருவம் முடிஞ்சி, கல்லூரி காலம். அப்போ என்ன விட்டு தூரமா பொய்டா. அதுக்கு அப்புறம் ரொம்ப நாள் வரல அவ. ஆனா அப்போ தான் என்ன சுத்தி இருக்குறவங்க எவளோ மோசமானவங்கனு புரிஞ்சிது. அவ மேல காதல் வந்துச்சு. தேடிப் போனேன்.. சந்திச்சோம். காதலிச்சோம். ”
“கேக்கவே நல்லா இருக்கு. இப்போவும் சேந்து இருக்கீங்களா?”
“அவளோட specialityயே அதான். எப்பயுமே என் கூட இருப்பா.. இது தெரிஞ்சி தான் அவளுக்கு என் மேல இருக்குற காதல உணர்ந்தேன். சில நாள் அவ இருக்குறது எனக்கு பிடிக்காது, சில நாள் அவ இருக்குறது தான் சொர்க்கம் மாதிரி இருக்கும்.ஆனா ஒன்னு புரிஞ்சிது. இருட்டுல நிழல் கூட விட்டு போகும், தண்ணிக்கு உள்ள மூச்சு கூட நின்னு போகும், அடிபட்டு கெடக்குறப்போ உசுரு கூட விட்டு போகும், ஆனா அவ என்ன விட்டு போக மாட்டா. ”
“அடடடடா அருமையா சொல்னீங்க . இப்படி ஒரு காதலியா?!!”
“கேக்க வியப்பா இருக்குல? இப்போ கொஞ்ச நாளா நான் அவ கிட்ட பேசல. இப்போ யார் கூட இருக்காளோ தெரில”
“என்னது?!!!! என்னங்க சொல்றீங்க”
“ஆமா சார். அவ….englishல சொல்லுவாங்களே, bitchனு அது தான் அவ”
“சார் இது என்ன சார் அநியாயம். என்ன தான் இருந்தாலும் என்ன மாதிரி ஒரு வெளி ஆள் கிட்ட உங்க காதலி பத்தி தப்பா பேசுறீங்களே.”
“சார் நீங்க வேற.. சொல்ல முடியாது. உங்க வீட்டுல உங்க ரூம்ல உங்க கூடயே இருப்பா”
“யோவ், போதும்யா. என்ன தான் இருந்தாலும் ஒரு பொண்ண இப்படியா பேசுவீங்க? அதுவும் சின்ன வயசுல இருந்து தெரியும் சொல்றீங்க”
“சின்ன வயசுல இருந்து அவள பத்தி தெரிஞ்சதால தான் சொல்றேன். பொண்ணா? அவ மனிஷியே இல்ல சார்”
“சார் என்ன தப்பு வேனா செஞ்சி இருக்கட்டும். ஆனா கோவத்துல இவளோ தரக்குறைவா பேசாதீங்க சார் யாரபத்தியும்”
“சார், நிஜமாவே அவ மனிஷி இல்ல சார்.”
“சார் போங்க சார். நான் கெளம்புறேன்.”
“சரி போங்க. அவ அந்த வீதி மொனைல உங்க கூட இருப்பா. நான் அவள கேட்டேன்னு சொல்லிடுங்க”
“ஓ, நக்கலா? சொல்றேன் சொல்றேன் நல்லாவே சொல்றேன் அவ கிட்ட. உங்கள பத்தி..அவ பேர் என்ன சொல்லுங்க. ?”
“அவ பேரா? ‘தனிமை’ மறக்காம சொல்லிடுங்க அவகிட்ட.”