தமிழ்

Poetry, தமிழ்

Happy Madras Day

This is a writeup I wrote last year for Madras Day.    “சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்களின் எண்ணிக்கை   மெரினாக் கடற்கரையின் தூரம்   கூவ ஆற்றுப் படுக்கையில் குடிசைகளின் எண்ணிக்கை.   தினம் நடக்கும் போராட்டங்களில் பங்குபெறும் மக்கள் எண்ணிக்கை   தினம் தினம் பேருந்தில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை….   என்று…. அனைத்தையும் அளந்து கூற முடியும்.   வெளியூர் சென்று ரயிலில் வரும் போது,  சென்ட்ரல் நிலையத்திற்கு முன்பு மெல்லிசை போல், கரைசேரும் படகு போல் அந்த ரயில் சென்றடையும் பொழுது வரும் அந்த உணர்வை வார்த்தைகள் கூற முடியாது, நெகிழ்ச்சியை அளந்து கூற முடியாது.   துன்பங்கள் ஆயிரம் தாக்கினாலும் பெசன்ட் நகர் கடற்கரையில் நண்பர்களுடன் சென்று போடும் அரட்டையில் வரும் சந்தோசம் எவ்வளவு என்று அங்கு அருகில் இருந்து அரட்டைகளை பார்த்து கொண்டிருக்கும் ஏழைச்சிறுவனின் சிரிப்பில் காண முடியும்.   எந்த ஊரில் பிறந்தால் என்ன எந்த ஊரில் வளர்ந்தால் என்ன தவிப்பது நம் சகோதர சகோதரிகள் என்று எண்ணி இயற்கை துன்புறுத்திய போதும், ஒன்றாய் நின்ற அந்த இரண்டு மாதக் காலத்தில் ஒவ்வொரு நொடிகளும் பொன்னொடிகள். காலத்தால் அழிக்க முடியாத அந்த ஒற்றுமையின் ஆழத்தை எண்ணி கூறமுடியுமா?   புதிதாக வரும் வெளிநாட்டு வீரர்களையும் பாசத்தால் நெகிழவைத்த “சென்னை சூப்பர் கிங்ஸ்” சட்டை அணிந்து, காலணி கூட அணியாமல் , சுட்டெரிக்கும் சூரியன்கீழ் மைதானங்களில் நண்பர்களுடன் மட்டைபந்து விளையாடிக்கொண்டிருக்கும் சிங்கங்களின் கர்வம் இந்த ஊர்   மீட்டர் போட மாட்டேன், போட்டால், மீட்டருக்கு மேல் எக்ஸ்ட்ரா என்று சொல்லும் ஆட்டோ ஓட்டுனர்கள் இருக்கலாம். ஆனால் அதிலும் பாசத்துடன் , நேசத்துடன் பேசி பழகி வாழ்க்கையின் அங்கமாய் திகழும் ஆட்டோ ஓட்டுனர்கள் பலர்.   வாழ்க்கை எங்கு சென்றுகொண்டிருக்கிறது என்பதை எண்ணி காலம் கழித்து இளையராஜா, ரஹ்மான் ஆகியாவரின் இசையில் அடைக்கலம் பெற்று பேருந்தின் ஜன்னல் கம்பிகளில் சாய்ந்து, வெளியே மாறிக்கொண்டிருக்கும் வெவ்வேறு சென்னையின் அடையாளங்களை வர்ணித்து கொண்டு செல்லும் அனைத்து நல்ல உள்ளங்களும் கர்வத்துடன், பாசத்துடன் சொல்லும் வரிகள், தான் ஒரு சென்னைவாசி என்று…   “நீ சொன்னதெல்லாம் பொதுவாகவே பெரும்பாலான ஊர்களில் உள்ளவை தானே” என்று நீங்கள் கேட்கலாம். அது தான் உண்மையும் கூட.   ஆனால், ஒரு மனிதன் தான் பிறந்து, வளர்ந்து, பழகி, சிரித்து, ஒவ்வொரு துன்பம் ,இன்பம் ஆகிய அனைத்தையும் பெற்று, பகிர்ந்து ,கற்று, தன் வாழ்க்கையில் நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஒப்பிட்டு, நினைக்க வைக்கும் அவனது ஊர் அவனுக்கு கோவில் ஆகிறது. எனது கோவில் மெட்ராஸ்.   பெற்றோர், நண்பர்கள், சகோதரர்கள் , சகோதரிகள் என எனக்கு பல தெய்வங்களை அளித்து கோடிக்கணக்கான சகோதர, சகோதரிகளை பெற்ற என் கோவிலுக்கு 378 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் <3   இப்படிக்கு, அ. பி. புவனேஷ் சந்தர்” Happy Madras Day 🙂

Poetry, Short Stories, தமிழ்

மழையின் சத்தம்

மழையின் சத்தம் அதிகரிக்க, போர்வையை முகத்திலுர்ந்து நீக்கினாள். “ஏய்ய் என்ன?” “மறந்துட்டேன். கொடி-ல துணி.” என்றாள். “பாத்தேன்… ச்சி விடு. இப்போ இங்க யாருக்கு துணி வேணும்?” என்று சொல்லி அவள் கழுத்தை இன்னொரு முறை முத்தமிட்டு வேட்டையாடினான். “நாளைக்கு office- கும் இப்படியே போறேன்-னு சொல்லு…நானும் விட்டுட்றேன்” “இப்படியே மழை பேஞ்சா office போக எப்படி தோணும்? முழு நேரமும் இங்கயே இருப்பேனே” பதில் சொல்ல வந்தவளை சொல்ல விடாமல் முத்தமிட்டான். நகரத்தைப் போர்வைப் போல் சூழ்ந்த அந்த மேகங்களால் வெளியே வெப்பம் குறைந்ததோ இல்லையோ, வீட்டின் உள்ளே சுகமாய் அமைந்தது பல போர்வை நொடிகள்.

Short Stories, தமிழ்

கரையும் இடைவெளி

கனவு. மூன்றெழுத்து.ஆழமோ, வேறொரு உலகம் அறியும்.   காதல். மூன்றெழுத்து. ஆழமோ, அவள் கண்ணிமைகளில் நீ கட்ட நினைக்கும் முத்தக்கோட்டை அறியும். கனவும் நிறைவேறி , அது காதலியாய் மாறி அவ்வப்பொழுது நினைவூட்டும் அழகிய நினைவுகளில் ஒன்று . அன்று திருவனந்தபுரம் சென்றுகொண்டிருந்தோம். ரயிலில் இருக்கும்  இரண்டாவது அடுக்கில் தூங்கிக்கொண்டிருந்தேன் நான். ஆறடிக்கு தென்னைமரம் போல் வளர்ந்துவிட்டமையால் ரயில் பயணத்தில் வசதிக்கெல்லாம் இடம் இல்லை. திடீரென்று முழிப்பு வர, கண்ணை கசக்கிக்கொண்டே எழுந்தேன். “என்னடா? தூங்கு” என்றாள் “இவளே எழுந்துட்டாளா?? விடிஞ்சிருச்சோ?” என்று எண்ணிக்கொண்டு எழுந்து பார்த்தேன். ஒரு கையில் சிப்ஸ் பொட்டலமும், மறுகையில் music playerம் வைத்து கொண்டு பாட்டு கேட்டுக்கொண்டிருந்தாள். தீனிப்பண்டாரம் எனக்கு கொடுக்காமல் அவளே சாப்பிட்டு கொண்டிருந்தாள். “என்ன மொரப்பு? ச்சி, படு” என்றாள் நானும் மறுபடியும் உறங்க சென்றேன். கண்ணை மூட, மனதில் ஓராயிரம் எண்ணங்கள். “இரவு நேரம், காதலி, யாருமில்ல” இது மட்டும் என் மனதில், அங்கு சம்பவிக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளையும் காட்ட, எழுந்து அவளை உத்துப்பார்த்தேன். இசையில் மூழ்கிக் கிடந்தாள். “ஐயோ, நாமளே டூயட் பாடலாமே எரும”,என்று நினைத்துக்கொண்டு, கைக்கழுவும் இடத்திற்கு சென்றேன். முகத்தை நீரில் கழுவி , கண்ணாடியில் என் முகத்தை உத்துப்பார்த்துக் கொண்டிருந்தேன். “டேய் நீ மாதவன் டா மச்சான்” என்று புகழாரம் சூட்டிக்கொண்டு, என் தொலைபேசியை எடுத்து ஏதோ நொண்டி கொண்டிருந்தேன். திடீரென ஏதோ சத்தம் கேட்க, திரும்பி பார்த்தேன். கைக்கழுவும் இடத்திற்கு அருகில் இருந்த சுவரின் மீது சாய்ந்துகொண்டு கையில் இருந்த music player இல் ஏதோ நொண்டி கொண்டிருந்தாள். அவள் அருகில் சென்றேன். “என்னடி பண்ற? தூங்கல?” என்று கேட்டேன். என் முகத்தை கூடப் பார்க்காமல், ” போர் அடிக்குது டா” என்றாள் இன்னும் அருகில் சென்றேன். அவளும் நான் நெருங்கியதை உணர்ந்தாள். “ஏய்” என்று கூப்பிட்டேன். “ஹம்ம்” என்றால். “எய்ய்ய்” என்றேன். எதுவும் கூறவில்லை. புரிந்துவிட்டது அவளுக்கு. அவள் கன்னத்தை பிடித்து முகத்தை எழுப்பினேன். வெட்கமும் காதலும் அவள் முகத்தில் ஜொலிக்க, நொடிகளை அவள் கண் இமைகளில் சேர்த்துவைத்தேன். “யாராச்சும் வராங்களா?” என்று கேட்டேன். எனக்கு பின் இருக்கும் பாதையை ஒரு நொடி பார்த்து, “யாரோ இருக்காங்க…. ஆனா…” என்றால். இடைவெளிகள் கரைய, முத்தமிட சென்றேன். ஆனால் யாரோ வருவதைப் போல் இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல், திடீரென்று கைக்கழுவும் இடத்திற்கு தாவி, எதுவும் நடக்காததை போல் நின்றேன். ரயில் காதலுக்கு ஏற்ற இடம் என்றால், இரவில் பயணம் செய்பவர்கள் அதற்கு கிடைத்த அசுரர்கள். சில நொடிக்கு பிறகு, சிரித்துக்கொண்டே சென்று தூங்கச்சென்றாள். அன்று எங்கள் உதடுகள் சேரவில்லை. ஆனாலும் அந்த கண்கள்… இரு உயிர்கள் சேர அவர்களின் தோல்கள் தொடவேண்டுமோ? நானும் சென்று என் தொலைபேசியை எடுத்து, இசையிடம் என் அனுபவத்தை கொண்டாட சென்றேன். “இதயம் இடம் மாறியதே, விழிகள் வழி மாறியதே” என்னும் பாடல். “மனமே மனமே எதனால் இத்தனை உற்சாகம் உணக்குள்ளே புதுவித தடுமாற்றம்   உனக்கென்ன நடந்தது சொல்வாயோ?   ஓ… மனமே மனமே எதனால் இத்தனை கொண்டாட்டம்   கண்ணுக்குள்ளே கனவுகள் கொடியேற்றம்   உனக்கென்ன நடந்தது சொல்வாயோ? புது யுகமே பிறந்ததோ பரிமாற்றம் நிகழ்ந்ததோ   இரு துருவம் இணைந்ததோ இடைவெளிகள் தொலைந்ததோ   காலமென்னும் நதியில் விழுந்து   இரவும் நகர்ந்தது, பகலும் நகர்ந்தது, இதயமும் நகர்ந்ததுவோ”

Short Stories, தமிழ்

என் காதலி

“என் கதைய சொல்லிட்டேன்.  உங்களோட காதல் கதைய சொல்லுங்க. இருக்கும்னு நெனைக்கிறேன்.” “ஓ, இருக்கே. சொல்றேன். என் காதலி. சின்ன வயசுல இருந்தே என் கூட தான் இருக்கா. அப்போலாம் ரொம்ப நெருங்கின நண்பர்கள்” “சின்ன வயசு தோழியா?!! அற்புதம்” “ஆமா. அப்போலாம் அவளுக்கு என்ன ரொம்ப பிடிக்கும். எப்பயுமே என் கூட தான் இருப்பா. ஆனா எனக்கு அவ்ளோவா பிடிக்கல. பள்ளி பருவம் முடிஞ்சி, கல்லூரி காலம். அப்போ என்ன விட்டு தூரமா பொய்டா. அதுக்கு அப்புறம் ரொம்ப நாள் வரல அவ. ஆனா அப்போ தான் என்ன சுத்தி இருக்குறவங்க எவளோ மோசமானவங்கனு புரிஞ்சிது. அவ மேல காதல் வந்துச்சு. தேடிப் போனேன்.. சந்திச்சோம். காதலிச்சோம். ” “கேக்கவே நல்லா இருக்கு. இப்போவும் சேந்து இருக்கீங்களா?” “அவளோட specialityயே அதான். எப்பயுமே என் கூட இருப்பா.. இது தெரிஞ்சி தான் அவளுக்கு என் மேல இருக்குற காதல உணர்ந்தேன். சில நாள் அவ இருக்குறது எனக்கு பிடிக்காது, சில நாள் அவ இருக்குறது தான் சொர்க்கம் மாதிரி இருக்கும்.ஆனா ஒன்னு புரிஞ்சிது. இருட்டுல நிழல் கூட விட்டு போகும், தண்ணிக்கு உள்ள மூச்சு கூட நின்னு போகும், அடிபட்டு கெடக்குறப்போ உசுரு கூட விட்டு போகும், ஆனா அவ என்ன விட்டு போக மாட்டா. ” “அடடடடா அருமையா சொல்னீங்க . இப்படி ஒரு காதலியா?!!” “கேக்க வியப்பா இருக்குல? இப்போ கொஞ்ச நாளா நான் அவ கிட்ட பேசல. இப்போ யார் கூட இருக்காளோ தெரில” “என்னது?!!!! என்னங்க சொல்றீங்க” “ஆமா சார். அவ….englishல சொல்லுவாங்களே, bitchனு அது தான் அவ” “சார் இது என்ன சார் அநியாயம். என்ன தான் இருந்தாலும் என்ன மாதிரி ஒரு வெளி ஆள் கிட்ட உங்க காதலி பத்தி தப்பா பேசுறீங்களே.” “சார் நீங்க வேற.. சொல்ல முடியாது. உங்க வீட்டுல உங்க ரூம்ல உங்க கூடயே இருப்பா” “யோவ், போதும்யா. என்ன தான் இருந்தாலும் ஒரு பொண்ண இப்படியா பேசுவீங்க? அதுவும் சின்ன வயசுல இருந்து தெரியும் சொல்றீங்க” “சின்ன வயசுல இருந்து அவள பத்தி தெரிஞ்சதால தான் சொல்றேன். பொண்ணா? அவ மனிஷியே இல்ல சார்” “சார் என்ன தப்பு வேனா செஞ்சி இருக்கட்டும். ஆனா கோவத்துல இவளோ தரக்குறைவா பேசாதீங்க சார் யாரபத்தியும்” “சார், நிஜமாவே அவ மனிஷி இல்ல சார்.” “சார் போங்க சார். நான் கெளம்புறேன்.” “சரி போங்க. அவ அந்த வீதி மொனைல உங்க கூட இருப்பா. நான் அவள கேட்டேன்னு சொல்லிடுங்க” “ஓ, நக்கலா? சொல்றேன் சொல்றேன் நல்லாவே சொல்றேன் அவ கிட்ட. உங்கள பத்தி..அவ பேர் என்ன சொல்லுங்க. ?” “அவ பேரா? ‘தனிமை’ மறக்காம சொல்லிடுங்க அவகிட்ட.”

Short Stories, தமிழ்

மொழி- உரையாடல்

“மொழியால எதுவேனாலும் செய்யவும், சொல்லவும் முடியுமா?” “முடியும்” ” எனக்கு அப்படி தோணல. சில விஷயங்கள மொழியால சொல்ல முடியாது நினைக்கிறேன்” ” அது நீங்க எத மொழினு சொல்றீங்கனு பொறுத்து” ” காதல சொல்ல முடியுமா?” “Again, காதலே ஒரு மொழி தான். நீங்க எத மொழினு சொல்றீங்க?” ” பேசுற பாஷய சொல்றேன். இப்போ தமிழ் மொழியோ, ஆங்கிலமோ இல்ல வேற ஏதோ மொழியோ இருக்கட்டும். காதல உணர்த்திக் காட்ட முடியுமா? முடியாதுல?” ” காதல சொல்ல முடியும். எந்த உணர்ச்சியையும் சொல்ல முடியும்.” ” அப்போ காட்ட முடியதுனு ஒத்துக்கிறீங்கல?” ” அது யார் கிட்ட சொல்றீங்க, எப்டி சொல்றீங்க பொறுத்து இருக்கு” “எப்டி?” “இப்போ suppose நான் உங்கள காதலிக்கிறேன்னு சொல்றேன் வைங்க… உதாரணத்துக்கு…. உங்களுக்கு காதல் என்ற சொல்லோட ஆழம் எவளோ தெரிதோ, அவளோ உங்களால என் காதல உணர முடியும். எவளோ என்ன பத்தி தெரிதோ, அவளோ உங்களால அந்த உணர்ச்சிய நம்ப முடியும். இந்த மாதிரி நெறய விஷயங்கள உணர வெக்கலாம். எப்டி சொல்றோம் பொறுத்து தான்” “So, மொழியால என்ன வேணாலும் செய்ய முடியும்னு நம்புறீங்களா? என்னால ஏத்துக்க முடியல” “உங்களால ஏத்துக்க முடிலனு சொல்றதே மொழியால தான் சொல்றீங்க. ஆக, எல்லாமே முடியுமோ முடியாதோ, மொழியால ஏதாச்சும் செய்ய முடியும்னு வெச்சிப்போமே?” “சரி அப்போ நான் தான் ஜெய்ச்சிற்கேன். ” “மொழியும் காதலும், மொழி மேல எனக்கு இருக்குற காதலும் ஜெய்ச்சிருச்சுனு எனக்கு தோணுது.”

Poetry, தமிழ்

அவளும் நானும்

​மாலை 4.30 மணி. மொட்டை மாடியில் அவளும் நானும். ஓடிக்கொண்டே இருக்கும் சென்னை மாநகரின் நடுவே நொடிகளை ரசித்துக்கொண்டு நானும் அவளும். ஊதாப்பூ தாவணி தென்றலுக்கு நடனம் ஆட, கவர்ந்தன கண்மணியின் கண்கள். பேசிக்கொண்டே இருந்தும் பேசாமல் இருப்பதைபோன்ற உணர்வு. உலகில் முதல் முதலில் இசை தோன்றிய தருணம் தானோ, அவள் அவ்வப்போது இசைக்கும் அமைதி. அவள் பேச்சில் நான் மயங்க, சில நொடிகளில் அவள் மடியில். அழகு எது என்று மனதில் யுத்தம் வர, கடவுள் இது என்று கண்களில் ஏக்கம் வர, “என்னை முத்தமிடு கண்மணியே.”

Scroll to Top