Poetry, தமிழ்
அவளும் நானும்
மாலை 4.30 மணி. மொட்டை மாடியில் அவளும் நானும். ஓடிக்கொண்டே இருக்கும் சென்னை மாநகரின் நடுவே நொடிகளை ரசித்துக்கொண்டு நானும் அவளும். ஊதாப்பூ தாவணி தென்றலுக்கு நடனம் ஆட, கவர்ந்தன கண்மணியின் கண்கள். பேசிக்கொண்டே இருந்தும் பேசாமல் இருப்பதைபோன்ற உணர்வு. உலகில் முதல் முதலில் இசை தோன்றிய தருணம் தானோ, அவள் அவ்வப்போது இசைக்கும் அமைதி. அவள் பேச்சில் நான் மயங்க, சில நொடிகளில் அவள் மடியில். அழகு எது என்று மனதில் யுத்தம் வர, கடவுள் இது என்று கண்களில் ஏக்கம் வர, “என்னை முத்தமிடு கண்மணியே.”